பெண்களுக்கு கண்களைச் சுற்றி வரும் கருப்பு வளையத்தினால் அவர்களின் அழகு குறைந்துவிடுகின்றது. இதனால் பெரும் கவலையில் மூழ்கி விடுகின்றனர்.
கருவளையம்
பெண்கள் பொதுவாக தங்களின் அழகை தக்க வைத்துக்கொள்ளவும், அழகாக வைத்துக்கொள்ளவும் அதிகமாகவே ஆசைப்படுவார்கள்.
இதற்காக அதிக நேரத்தினை செலவழிப்பது மட்டுமின்ற பணத்தையும் செலவழித்து வருகின்றனர். பெண்களின் அழகை கெடுப்பதில் முக்கிய பங்காக இருப்பது கண்களைச் சுற்றி தோன்றும் கருவளையம் ஒன்று தான்.
கண்ணின் கருவளையத்தை போக்க பாதாம் எண்ணையை பயன்படுத்தலாம் என்றும் பாதாம் எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தினால் கண்ணில் கருவளையம் மாயமாய் மறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பிரச்சினையாக இருந்து வரும் நிலையில் அவர்களும் பாதாம் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளலாம்.
கருவளையம் வந்துவிட்டால் முகம் பொலிவிழந்து காணப்படுவதுடன், பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஏ டி ஏ இ மெக்னீசியம் கொழுப்பு மற்றும் அமிலங்கள் காணப்படுகின்றது.
ஆகவே பாதாம் எண்ணையை கண்ணின் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவினால் ஒரு சில நாட்களில் கருவளையம் மறைந்து விடும் என்று கூறப்படுகிறது.