முல்லைத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-12-2023) நண்பகல் 12.30 தொடக்கம் இன்று (24) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (24-12-2023) அதிகாலை (4.30 மணி தொடக்கம்) பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை முல்லைத்தீவின் கள்ளப்பாடு, தீத்தக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றி வளைப்புகளின்போது 3 கிராம் கெரோயின் 480 கிராம் ஐஸ், ஒரு கிலோ 855 கிராம் 39 மில்லிக்கிராம் கேரள கஞ்சா கஞ்சா செடி 5 மற்றும் 48 கிராம் வேறு வகையான போதை பொருட்கள் 443 லீற்றர் கசிப்பு 1797 லீற்றர் கோடா உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு பெண்களும் 111ஆண்களுமாக 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 25 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.