பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறிய சரவண விக்ரம் வாங்கிய சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 84 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த சீசனில் தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
வெளியேறிய விக்ரம்
இந்நிலையில் நேற்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவண விக்ரம் வெளியற்றப்பட்டுள்ளார். இவர பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்துவந்ததுடன், ரசிகர்களின் மீம்ஸ்க்கும் அவ்வப்போது தீனி போட்டும் வந்தார். இந்நிலையில் பிக் பாஸிலிருந்து வெளியேறிய சரவணனின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்குமே ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அப்படி, சரவண விக்ரமிற்கும் ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாம்.
இவர், பிக்பாஸ் 7 வீட்டில் 80 நாளைக்கு மேல் இருந்துள்ளார். இதனால் இவருக்கு சுமார் 14 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.