தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனைத் தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது.
முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும். பருவகால தொற்றுநோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ தரும்.
தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துகள் இருக்கின்றன. தேங்காய் பூவை சாப்பிடும்போது கிடைக்கும் சுவைக்காகவே மக்கள் அதிகம் அதை விரும்புகிறார்கள்.
தேங்காய் பூவிலிருந்து பல ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய் பூவாய் மாறுகிறது.
தேங்காய்ப்பூவில் உள்ள நன்மைகள்:
தேங்காய்ப்பூவை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உண்டாகும் பாதிப்பை தடுக்க முடியும். அதுமட்டுமின்றி உடல் பொலிவை அளிக்கக்கூடும்.
வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்றவை நிறைந்துள்ளதால் இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.
வயிறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணத்தை விரட்டக்கூடும். வைட்டமின் மற்றும் Mineral ஆனது இந்த தேங்காய்ப்பூவில் உள்ளதால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.
உடலில் இன்சுலின் சுரப்பை தூண்ட தேங்காய்ப்பூ உதவுகிறது என்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டு வருவது சிறந்தது.
மலச்சிக்கல் பிரச்சனையை படிப்படியாக குறைக்க மற்றும் உங்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவும். முதுமையை குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டானது இந்த தேங்காய்ப்பூவில் நிறைந்துள்ளது.
அதிகப் பணிச்சுமை காரணமாக மனஉளைச்சலுக்கும், உடல் சோர்வுக்கும் ஆளாகுபவர்கள் இதனை உட்கொண்டுவந்தால் நன்மை பயக்கும்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள அதுமட்டுமின்றி தைராய்டு சம்மந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுபட இந்த தேங்காய்ப்பூவை உட்கொள்ளலாம்.
தேங்காய்ப் பூ சாப்பிட்டால் மாரடைப்பு மட்டுமல்லாமல் பிற இதயக் கோளாறுகளில் இருந்தும் விடுபடலாம்.