நடிகர் முத்துக்காளை வடிவேலு உடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து இருப்பவர். வடிவேலு கடந்த பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்ததால் முத்துக்காளை போன்ற துணை காமெடியன்களுக்கும் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
மேலும் முத்துக்காளை போதைக்கு அடிமையானவர் என தொடர்ந்து பல வருடங்களாக விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது.
3 பட்டம்
“என்னை குடிகாரன் என சொல்லி தொடர்ந்து மீடியாக்களில் செய்தி வருகிறது. நான் எண்ணமே வைன் ஷாப் வாசலில் விழுந்து கிடப்பது போல பேசுகிறார்கள்.”
“குடியில் இருந்து மீண்டும் வந்த நான் இந்த பெயரை மாற்ற நான் எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்து தற்போது மூன்று பட்டங்கள் பெற்று இருக்கிறேன்” என முத்துக்காளை கூறி இருக்கிறார்.