இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இன்று (27.12.2023) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்து 168,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் புதன்கிழமை இதன் விலை 163,700 ரூபாயாக காணப்பட்டது.

இதனிடையே கடந்த புதன்கிழமை 177,000 ரூபாயாக நிலவிய “24 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை இன்று 182,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன