விஜயகாந்த் மறைவு குறித்து திரையரங்குகள் எடுத்த அதிரடி முடிவு!

விஜயகாந்த்
தமிழ் சினிமா இன்று தனது வீட்டில் இருந்த முக்கியமான ஒருவரை இழந்துவிட்டது, அவரது இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.

தீரா நோயுடன் போராடி வந்த கேப்டன் இன்று ஓய்வு பெற்றுவிட்டார், செய்தி கேட்டதில் இருந்து தமிழக மக்கள் அனைவருமே துக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர். பிரபலங்களும் கேப்டனை நினைத்து வருத்தமாக பதிவுகள் போட்டு வருகிறார்கள்.

தனது வீட்டிற்கு யார் வந்தாலும் இல்லை என்று கூறாமல் அள்ளி அள்ளி கொடுத்த கேப்டனை கடைசியாக பார்க்க அவரது வீட்டில் கோடாண கோடி மக்கள் கூடியுள்ளனர்.

இந்த நிலையில் கேப்டனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒரு முடிவு எடுத்துள்ளனர்.

அதாவது இன்று காலை அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளார்கள்.