கொழும்பு பிரபல ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!

கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 2ஆவது மாடியில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ பரவலில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர் செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.