நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு ஒட்டுமொத்த சினிமா துறையும் இரங்கல் தெரிவித்து வருகிறது. ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி என பல முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று நடிகர் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.
ஆனால் நடிகர் அஜித் வெளிநாட்டில் இருப்பதால் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
போனில் பேசிய அஜித்
இந்நிலையில் நடிகர் அஜித் விஜயகாந்த் குடும்பத்திடம் போன் செய்து பேசி தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோரிடம் அவர் போனில் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.