தன்னை மோசமாக பேசிய வடிவேலுக்கு நன்மை செய்த விஜயகாந்த்

விஜயகாந்த்
கேப்டன், கேப்டன், விஜயகாந்த் என தமிழ்நாடே 2 நாட்களாக புலம்பி வருகிறது. கோடான கோடி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என விஜயகாந்தை கடைசியாக காண வந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் அவரை நல்லபடியாக அடக்கம் செய்யும் நேரமும் வர பலரால் அவரை கடைசியாக நேரில் காண முடியவில்லை.

தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது

வடிவேலு-விஜயகாந்த்
அவரின் மறைவு செய்தி வெளியானதில் இருந்து இதற்கு முன் விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன. நடிகர் வடிவேலு தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கேப்டன் விஜயகாந்த் பற்றி தரக்குறைவாக பேசிய விஷயம் நாம் அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் இதனை கேள்விப்பட்ட விஜயகாந்த், வடிவேலு மீது கோபமே படவில்லை, அதற்கு மாறாக யாரும் வடிவேலுவை தரக்குறைவாக பேச வேண்டாம் என பிரச்சார நேரத்திலேயே அனைவரிடமும் கூறி இருக்கிறார்.

அதோடு தேர்தலுக்கு பின் வடிவேலு நடிக்காமல் இருந்த போது விஜயகாந்த் அவர்களே நிறைய தயாரிப்பாளர்களிடம் அவரை நடிக்க வைக்க கூறி ரெக்கமெண்ட் செய்துள்ளார்.