நாட்டின் முன்னணி பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான கொத்மலை டெய்ரி புரொடக்ட்ஸ் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 170 மில்லி வெண்ணிலா பால் பொதியின் விலை திடீரென 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு முன்னர் இந்த பால் பாக்கட் ஒன்றின் விலை 80 ரூபாவாக இருந்தது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் VAT அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், பால் பொதி ஒன்றின் விலை திடீரென 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய நுகர்வோர் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
பாலின் விலை அதிகரிப்பு
எவ்வாறாயினும், VAT அதிகரிப்பு 18 சதவீதமாக உள்ளது, மேலும் ஒரு பாக்கெட் பால் 20 ரூபாய் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் நுகர்வோர் சமூக ஊடகங்களிலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொத்மலையில் உள்ள 17,000 உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து புதிய பால் பெறப்படுவதாகவும், உள்ளூர் விவசாயிகள் நிறுவனத்தின் மூலம் 5.2 பில்லியன் நேரடி வருமானத்தைப் பெறுவதாகவும் Cargills இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
நாளாந்தம் 180,000 லீற்றர்களை சேகரிப்பதன் மூலம் இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை புதிய பால் சேகரிப்பாளராக நிறுவனம் என தன்னை நிலைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.