கேப்டன் விஜயகாந்த் மறைவு
கடந்த 28ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக காலமானார் கேப்டன் விஜயகாந்த். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்தின் உடல் அதன்பின் அவருடைய அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கே மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத காரணத்தினால், மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என நோக்கத்தோடு, தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.
இதன்பின் மீண்டும் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு விஜயகாந்தின் உடல் அங்கேயே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய உடல் மட்டும் தான் நம்மிடம் இருந்து மறைந்துள்ளது, அவருடைய நினைவுகள் என்றும் நம் மனதில் இருந்து மறையாத இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்ஸீன் புகைப்படம்
இந்நிலையில், விஜயகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் என கேட்டு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை வேறு யாருமில்லை விஜயகாந்தின் மகன் தான்.
ஆம், நடிகர் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..