பிக் பாஸ் 7
சின்னத்திரையில் அதிகமாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தற்போது தமிழில் 7வது சீசன் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இறுதி கட்டத்தை பிக் பாஸ் 7 அடைந்துள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில் வெற்றியாளர் யாராக இருக்க முடியும் என அனைவர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.
இப்படி ஒரு பக்கம் என்னதான் நல்ல விஷயங்களாக பிக் பாஸ் குறித்து பேசிக்கொண்டு இருந்தாலும், மறுபக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொய் பித்தலாட்டம்
இந்த வாரம் எவிக்ஷனில் மாயா தான் வெளியேறுவார் என தொடர்ந்து தகவல் வெளியாகி கொண்டு இருந்தது. சமூக வலைத்தளம் மூலம் நடத்தப்பட்ட வோட்டிங் போலில் மாயா மற்றும் நிக்சன் தான் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று எவிக்ஷன் ஆகும் இடத்தில் இருந்தனர்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா தான் வெளியேறப்போகிறார் என்றும், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை ரவீனா தான் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
யாரை காற்றுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியினர் இப்படி செய்கிறார்கள். இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா, இவை அனைத்துமே பொய் பித்தலாட்டம் என கோபத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.