சீரியலில் ஹீரோவாக களமிறங்கும் மயில்சாமி மகன்

பிரபல காமெடியன் மயில்சாமி ஏராளமான படங்களில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் இந்த வருடம் பிப்ரவரி 19ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவருமே சினிமாவில் ஹீரோவாக தான் முயற்சித்து வந்தனர். சில படங்களில் அவர்கள் நடித்து இருந்தாலும் அவை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

சீரியலில் நடிக்கும் மயில்சாமி மகன்
இந்நிலையில் தற்போது நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி விஜய் டிவி சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

தங்கமகள் என்ற புது சீரியலில் தான் அவர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறாராம்.