முல்லைத்தீவில் ஜஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞன்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (29.12.2023) புதுக்குடியிருப்பு, பரந்தன் வீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய அதே பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

போதைப்பொருட்கள் மீட்பு
இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 15 மில்லிக்கிராம் கொண்ட 8 சுருள் ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றுக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 80 ஆயிரம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.