அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அரசின் அதிரடி அறிவிப்பு!

நடப்பாண்டின் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்குச் செல்ல முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி பல்வேறு மாகாணங்களில் மழை, வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தமது கடமை நிலையங்களுக்குத் செல்ல முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுகின்றனர்.

இந்த விடுமுறையை பெற்றுக் கொள்வதற்காக வதிவிட கிராம அதிகாரியின் சிபாரிசுடன் கோரிக்கையை முன்வைக்குமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .