நடிகர் விஜயகாந்த்
விஜயகாந்தின் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி நல்ல மனிதர் என பெயர் எடுத்துள்ள்ளார்.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலை அவருடைய தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு பின் அவர் குறித்து பல விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் செய்த தானம், தர்மம் குறித்து பலரும் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் சத்யராஜ் நடிகர் விஜயகாந்த் ரியல் ஹீரோவாக செய்த விஷயம் குறித்து மேடையில் பேசியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் பேசிய விஷயமாக இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ரியல் ஹீரோவாக மாறிய விஜயகாந்த்
இதில், நடிகர் சங்கத்திற்காக நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு நட்சத்திரங்களின் வீட்டிற்கும் சென்றுள்ளார். அப்போது ஆச்சி மனோரமா வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும் வேளையில், திருடன் ஒருவன் பெண்ணின் கழுத்தில் இருந்து Chain-ஐ பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
காரில் இருந்த விஜயகாந்த் தான் சென்று கொண்டிருந்த காரை நிறுத்திவிட்டு, ஓடி போய் அந்த திருடனை பிடித்துள்ளார். எந்த ஒரு ரீல் ஹீரோவும் செய்ய தயங்கும் விஷயத்தை, நம்ம ரியல் ஹீரோ விஜயகாந்த் செய்துள்ளார் என சத்யராஜ் பேசியுள்ளார்.