விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை!

கேப்டன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவர் கடந்த சில வருடங்களாகவே சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்கள் நேரில் வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

நிறைவேறாத ஆசை
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் மகன் சண்முகபாண்டியன் நீண்ட முடி மற்றும் தாடி வைத்திருந்தார். அவர் தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காகவும் அடுத்து அவர் நடிக்க இருக்கும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸுக்காகவும் தான் இப்படி முடி வளர்த்து இருக்கிறார்.

சசிகுமார் இயக்கும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸ் பற்றி கேட்டதுமே விஜயகாந்த் தனது மகன் அதில் நடிக்க வேண்டும் என கூறினாராம்.

ஆனால் அதற்கான ஷூட்டிங் துவங்கும் முன்பே அவர் காலமாகிவிட்டார்.