மாயாவிற்கு கிடைத்த ஏமாற்றம்.. பணப்பெட்டியோடு பறந்த பிரபலம்

பணப்பெட்டியை எடுத்து கொண்டு பூர்ணிமா வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

அதிலும் கடந்த வாரம் நடந்த டவுள் எவிக்ஷனில் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டனர்.

பணப்பெட்டியுடன் வெளியேறிய பிரபலம்

இந்த நிலையில், இன்றைய தினம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஜோடியாக சுற்றித்திரிந்த பூர்ணிமா – மாயா இருவரில் பூர்ணிமா வெளியேறியது மாயாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணபெட்டியில் உள்ள தொகை 12 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அடுத்து, தொகை உயர உயர, ஒரு கட்டத்தில் ரூ.16 லட்சமாக வந்து நின்றது.

கடந்த இரு நாட்களாக பணப்பெட்டியை கைப்பற்றப் போவது யார்? என்கிற ரோலர் கோஸ்டரில், எதிர்பார்த்தபடி பூர்ணிமா, அதை கைப்பற்றியுள்ளார்.