ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி நடித்திருந்தனர். மேலும் கெஸ்ட் ரோல்களில் மலையாள நட்சத்திரம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்திருந்தனர்.
அப்டேட்
தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் உடன் கூட்டணி வைக்கவுள்ளாராம்.
ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான டிஸ்கஷனில் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இறங்கியுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.