அசோக் செல்வனின் “சபா நாயகன்” எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?

சபா நாயகன்
ஓ மை கடவுளே படத்திற்கு அசோக் செல்வன், வித்தியாசமான, எதார்த்தமான கதைகளில் நடித்து சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்நது வருகிறார்.

இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான சபா நாயகன் திரைப்படம் கடந்த டிசம்பர் 22-ம் வெளியானது.

இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி என மூன்று ஹீரோயின்கள் நடித்து இருந்தனர். மேலும் மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்து உள்ளனர்.

வசூல்
இந்நிலையில் சபா நாயகன் படத்தின் வசூல் விவரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் இதுவரை ரூபாய் 14 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.