டிஜிட்டல் மயமாகும் பிறப்புச் சான்றிதழ்!

பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டத்தை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் செயற்பாடுகள்
இந்த நிலையில் குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதிகரிப்பு உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.