‘படோவிட்ட அசங்க’ எனப்படும் பிரபல பாதாள உலக நபரின் கூட்டாளி என நம்பப்படும் உதவியாளர் ஒருவர் ‘யுக்திய’ என்ற போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது, சந்தேகநபரிடம் இருந்து 06 கிராம் ஹெரோயின், 10 கிராம் கேரள கஞ்சா, 05 வாள்கள் மற்றும் 467,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.