அரச நிறுவனங்களின் தலைமை கணக்கு அதிகாரிகளை திறைசேரி எச்சரித்துள்ளது.
2024க்கு ஏற்கனவே வரவுசெலவுத் திட்டத்தில் இல்லாத எந்தவொரு செலவினத்திற்கும் அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றே திறைசேரி எச்சரித்துள்ளது.
இது ஒரு செலவு மிக்க தேர்தல் ஆண்டாகும் என்பதை கருத்திற்கொண்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செலவின முன்னுரிமை வரிசை
இந்த நிலையில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கான சுற்றறிக்கையில், திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த வருடத்திற்கான செலவின முன்னுரிமை வரிசையை சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலுவையில் உள்ள கடன்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பதால், நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் தீர்க்கப்பட வேண்டும்.
ஆத்துடன் 2024 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் வரம்புகளை மீறாமல் செலவினங்களை நிர்வகிக்குமாறு அனைத்து தலைமை கணக்கியல் அதிகாரிகளுக்கும் திறைசேரியின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் சிறந்த செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.