விஜயகாந்த்
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் பற்றி பேசவேண்டும் என்றால் அதற்க்கு ஒரு நாள் போதாது. ஏனெனில் அவர் தமிழ் சினிமாவிற்கு, அரசியலுக்கும் செய்த விஷயங்கள் பல உள்ளன.
அதில் ஒரு விஷயம் குறித்து தான் தற்போது பார்க்க இருக்கிறோம். நடிகர் சங்கத்திற்கு தலைவரான விஜயகாந்த், நடிகர் சங்கத்தின் மீது இருந்த கடனை அடைக்க வேண்டும் என சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் திரை நட்சத்திரங்களை வைத்து கலைநிகழ்ச்சி நடத்தினார்.
பணமோசடி செய்த நபர்
நிகழ்ச்சி முடிந்தபின் அந்த நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்த நபர் நடிகர் சங்கத்திற்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த ஆர்கனைசரிடம் போய் விஜயகாந்த் பேசியுள்ளார். பணம் தரமுடியாது என திமிராக பேசியுள்ளார் அந்த நபர். இதனால் கடுப்பான விஜயகாந்த், அந்த நபர் பிடித்து சுவற்றில் ஆணி போல் தொங்கவிட்டுள்ளார்.
இதை பக்கத்தில் இருந்த பார்த்தவர்கள் மிரண்டு போய்விட்டனர். இதன்பின், நடிகர் சங்கத்திற்கு தரவேண்டிய பணத்தை கொடுக்கிறேன் என அந்த நபர் கூறினாராம்.
கேப்டன் செய்த இந்த தரமான சம்பவத்தை நேரில் இருந்த பார்த்த தயாரிப்பாளர் டி. சிவா, இதை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். என்றுமே தைரியத்துடன் நியாயத்துடன் போராடியவர் விஜயகாந்த் என கூறியுள்ளார்.