நடிகர் விஜயகுமார் வாழ்க்கை வரலாறு

விஜயகுமார்
1943ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த விஜயகுமார் அவர்கள் 1961ல் சிவாஜி கணேசன்-பத்மினி நடித்த ஸ்ரீவள்ளி படத்தில் இளம் முருகனாக நடித்தார்.

அதன்பிறகு ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர் 1967ல் வெளியான கந்தன் கருணை படத்தில் முருகக் கடவுளாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டார், பின் அதில் சிவகுமார் நடித்தார்.

1974ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்களை திரைப்படம் விஜயகுமார் திரைப்பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

70-80களில் பல முக்கியத்துவம் வாய்ந்த துணைக் கதாபாத்திரங்களிலும் இரண்டாம் நாயகனாகவும் பல முக்கிய படங்கள் நடித்தார்.

அழகே உன்னை ஆராதிக்கிறேன், பகலில் ஓர் இரவு உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாநாயகனாகவும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவகுமார், ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

அதன்பிறகு வில்லன், அப்பா, தாத்தா, முதலமைச்சர், அமைச்சர் என நிறைய கண்ணியமான வேடங்களில் அதிகமாக நடிக்கத் தொடங்கினார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

குடும்பம்

80 வயதான விஜயகுமாருக்கு முத்துகண்ணு, மஞ்சுளா என இரண்டு மனைவிகள். இவருக்கு அருண் விஜய் என்ற மகனும், 5 மகள்களும் உள்ளனர்.