அருண் விஜய்
கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் நடிகர் அருண் விஜய்க்கு மிக பெரிய கம்பேக் கொடுத்த படமாக அமைந்தது.
இதனை அடுத்து பல வித்தியசமான கதைக்களத்தில் நடித்து பிஸி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
விடாமுயற்சி
இந்நிலையில் அருண் விஜய், தான் வணங்கான் படத்தில் நடித்து வருவதால் விடாமுயற்சி படத்தில் நடிக்க முடியமால் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விடாமுயற்சி படத்தின் மூலம் மகிழ் திருமேனி தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்துவார். ஒரு ஹீரோவாக மகிழ் திருமேனி பிடித்துவிட்டால் அவரை திரையில் மிகவும் சிறப்பாக காட்ட முற்படுவார் என்று அருண் விஜய் கூறியுள்ளார்.