பிரபல ஹோட்டல் அறையில் சடலமாக மீட்க்கப்பட்ட வெளிநாட்டவர்!

களுத்துறையில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறையில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஹோட்டலின் அறை எண் 324 இல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.