2024ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயனுக்கு வந்த முதல் ஏமாற்றம்

நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவருடைய முந்தய படமான மாவீரன் சூப்பர்ஹிட்டானது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல கம் பேக் கொடுத்தது.

இதை தொடர்ந்து வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்காக தான் ரசிகர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகர் என்பதை கண்டிப்பாக நாம் அனைவரும் அறிவோம். அவர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

அப்படி சிவகார்த்திகேயனுக்கு தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்ததாக தகவல் வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது.

ஏமாற்றம்
ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லையாம்.

இந்த தகவல் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் இருவரையும் ஒரே திரையில் பார்க்கலாம் என பலரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவல் அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் தலைவர் 171 படத்தில் வேறு என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று.