பொன்னம்பலம்
90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் வில்லன்களில் ஒருவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவர் பேசிய அடியே தாய்கிளவி என்ற வசனம் தற்போது வரை பிரபலம்.
சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த பொன்னம்பலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதன் பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு சில திரை பிரபலங்கள் பலரும் உதவி செய்தனர்.
தற்போது மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்த பொன்னம்பலம், இனி படங்களில் நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
புகைப்படம்
இந்நிலையில் பொன்னம்பலம் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிலும் அவரது மகளின் புகைப்படம் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. “உங்களுக்கு இவ்வளவு அழகான மகள் இருக்காங்களா?” என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.