பிரபல நடிகர் நடிகவேல் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறு.

எம்.ஆர். ராதா
ரசிகர்களாலும், திரையுலகினராலும் எம்.ஆர். ராதா என அழைக்கப்படும் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் கடந்த 1907ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி தமிழ் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தீவிர அரசியல்வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியார் ஈ.வி. ராமசாமியால் இவருக்கு ‘நடிகவேல்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் பெரும்பாலும் வில்லன் வேதங்களில் நடிப்பார்.

ஆனால், இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எம்.ஆர். ராதா தனது தாய்யுடன் ஏற்பட்ட சண்டையால் சிறுவயதிலேயே தனது வீட்டை விட்டு வெளியேறினார்.

மேடை நாடகம் – திரை வாழ்க்கை
5000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் நடித்த மிகவும் பிரபலமான நாடக கலைஞர் ஆவார் எம்.ஆர். ராதா. 10 வயதில் துவங்கிய இவர் கலை பயணத்தில் சிறிய வேடங்களில் தோன்ற ஆரம்பித்தார். பின் நாடகங்களுக்கான கதைகள் அவருக்காகவே எழுதப்பட்ட ஒன்றாக மாறும் நிலைக்கு வளர்ந்தார்.

எம்.ஆர். ராதா மேடை நாடகமான ரத்த கண்ணீர் வெற்றியின் மூலம் பிரபலமானார். கிருஷ்ணன் – பஞ்சு இயக்கிய நாடகத்தின் 1954 திரைப்பட பதிப்பில் அவரது நடிப்பு அவரது திறமைகளுக்கு பரந்த அங்கீகாரத்தை தேடி கொடுத்தது.

மேடை நாடகத்தில் இருந்து திரையுலகிற்கு சென்ற எம்.ஆர். ராதா ஒரு பக்கம் வில்லனாகவும், மறுபக்கம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கும் இவர் வில்லனாக நடித்துள்ளார்.

நடிகர் எம்.ஆர். ராதா 1979 செப்டம்பர் 17ஆம் நாள் அன்று தனது 72வது வயதில் திருச்சிராப்பள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் மஞ்சள் காமாலை நோயால் காலமானார். இவருடைய மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஆகும். இன்று வரை இவை போல் ஒரு நடிகரை தமிழ் சினிமா கண்டதில்லை, இன்னும் காணுமா என்பது சந்தேகம் தான்.

அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பினால் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார் நடிகவேல் எம்.ஆர். ராதா. ரத்த கண்ணீர், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பலே பாண்டியா, குடும்ப தலைவன் மற்றும் பாசம் என எம்.ஆர். ராதா நடிப்பில் வெளிவந்து மக்கள் மனதை கவர்ந்த திரைப்படங்கள் ஏறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.