கனடாவில் மற்றுமொரு பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் மற்றுமொரு பணிப்புயல் தாக்கம் ஏற்படும் என சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முதல் ஞாயிறு வரையில் இந்த பனிப்புயல் ஊடறுப்பு நிலையை அவதானிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாகாணங்களின் பல பகுதிகளில் சுமார் 30 சென்ட்டிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக மாகாணங்களின் சில பகுதிகளில் காலநிலை குறித்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் எனவும் சில பகுதிகளில் மறை ஐம்பது பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.