அதிதி ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குனரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
நடிகையாக மட்டுமின்றி நல்ல பாடகி என்ற பெயரையும் பெற்றுள்ளார். தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாவது அதிதி ஷங்கர் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருமன் படத்தை தொடர்ந்து மாவீரன் படமும் இவருக்கு வெற்றியாக அமைய தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சூர்யாவின் புறநானூறு திரைப்படத்திலும் இவர் நடிக்கிறார் என அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயது புகைப்படம்
இந்நிலையில், ஷங்கர் மகளின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தனது தாய், தந்தை, அக்கா மற்றும் தம்பியுடன் அதிதி ஷங்கர் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ரெட்டை ஜடைபோட்டு எவ்வளவு க்யூட்டாக அதிதி ஷங்கர் இருக்கிறார் என்று நீங்களே பாருங்க..