மெரி கிறிஸ்துமஸ்
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து ஹிந்தி மற்றும் தமிழில் கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் மெரி கிறிஸ்துமஸ்.
அந்தாதுன் படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கத்ரினா கைஃப் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு இடையே டீசண்டான வரவேற்பை பெற்றுள்ளது. ஆம், படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தாலும் படத்தில் இருக்கும் சில மைனஸ் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் விஜய் சேதுபதியின் பாலிவுட் பயணத்திற்கு பெரிதளவில் உதவவில்லை என்பதே ரசிகர்களுடைய கருத்தாக இருக்கிறது.
வசூல் விவரம்
இந்நிலையில் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.