கமல் ஹாசனிடம் மன்னிப்பு கேட்ட விஜய் டிவி புகழ்

புகழ்
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புகழ் மற்றும் KPY குரேஷி ஆகியோர், கமல் மற்றும் மாயாவை சேர்த்து வைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தனர்.

அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு கமல் ஹாசன் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மன்னிப்பு
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய புகழ், “கமல் ஹாசன் சார் ரசிகர்களுக்கு வணக்கம். கொஞ்சம் மாதத்திற்கு முன்பு துபாயில் நானும் என் நண்பரும் கலந்துகொண்டோம்”.

“அப்போது எங்களுக்கு கொடுத்த அவுங்க கொடுத்த ஸ்கிரிப்ட்டில் சில வார்த்தைகள் கமல் ஹாசன் ரசிகர்களை புண்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது. கமல் ஹாசன் ரசிகர்களுக்கு மனம் புண்பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்”.

” இனி நான் அப்படி பண்ண மாட்டான். நான் அப்படி பண்ணக்கூடிய ஆள் கிடையாது” என்று புகழ் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து குரேஷியும் வீடியோ மூலம் தனது மன்னிப்பு தெரிவித்து உள்ளார்.

இதோ வீடியோ..