நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அவரது ரசிகர்கள் ரஜினியிடம் வாழ்த்து பெறுவதற்காக பண்டிகை நாட்களில் வீட்டு வாசலில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்காக ரஜினி உள்ளே இருந்து ஏறி நின்று பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவிப்பதும் அடிக்கடி நடக்கிறது.
ரஜினி வெளியில் வர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கத்தி கூச்சல் போடுவதும் தொடர்கதை ஆகிவிட்டது.
கொந்தளித்த மூதாட்டி
இந்நிலையில் ரஜினி வீட்டின் பக்கத்து வீட்டு மூதாட்டி வெளியில் வந்து ரஜினி ரசிகர்களிடம் அதிருப்தியாக பேசி இருக்கிறார்.
எல்லா பண்டிகைக்கும் வந்து சத்தம் போடுகிறீர்கள். நல்ல நாளில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என சொல்லி திட்டிவிட்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.