நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மிஷன் படத்தின் வசூல்..

மிஷன் சாப்டர் 1
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அருண் விஜய். இவர் நடிப்பில் தற்போது மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் என பலரும் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து இப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அருண் விஜய் – இயக்குனர் விஜய் கூட்டணியில் நல்ல ஆக்ஷன் திரைப்படமாக மிஷன் சாப்டர் 1 வெளிவந்துள்ளது.

வசூல்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மிஷன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் தற்போது வரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாக கூறப்படுகிறது.

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.