அச்சு அசல் ஜோதிகா போலவே இருக்கும் அவருடைய அக்கா

ஜோதிகா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவுடன் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதன்பின் ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் களமிறங்கி ஜோதிகா சோலோ ஹீரோயின் கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் கூட. நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது ஹிந்தியில் தொடர்ந்து மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஜோதிகாவின் சகோதரிகள்
நடிகை ஜோதிகாவின் அக்கா இருவருமே நடிகைகள் ஆவார்கள். இதில் ஒருவர் நடிகை நக்மா, இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவார்கள்.மற்றொருவர் நடிகை ரோஷினி ஆவார்.

இவர் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் ஜோதிகாவின் அக்கா ரோஷினியை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோஷினியும் ஜோதிகாவும் பார்க்க அச்சு அசல் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..