நடிகை தமன்னா
திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படமும் தமிழில் வெளிவரவில்லை.
ஆனாலும் கூட ஜெயிலர் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியதன் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்களுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடிகர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
நடிகர்களின் உணர்வு குறித்து பேசிய தம்ன்னா
இதில் அவர் கூறுகையில் ‘அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகமாக விரும்புவதில்லை. மாறாக நடிகையை விட அவர்கள் பதட்டமாகவும், சங்கடமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்’ என கூறினார்.
மேலும் ‘ நடிகை என்ன நினைப்பார்கள் என்று நடிகர்கள் கவலைப்படுவார்கள். இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நடிகர்கள் மனதில் பல கேள்விகள் எழும்’ என தமன்னா கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.