ஒட்டுமொத்த குடும்பத்துடன் இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார்..

ராதிகா சரத்குமார்
திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார்.

1978ல் தனது திரை வாழ்க்கை பயணத்தை துவங்கிய ராதிகா, இன்று வரை மக்களின் ஆதரவை பெற்று மார்க்கெட் இழக்காமல் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடிய தருணங்களை புகைப்படங்கள் மூலம் திரையுலக பிரபலங்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ராதிகாவின் பொங்கல் கொண்டாட்டம்
அந்த வகையில் தற்போது நடிகை ராதிகா சரத்குமார் தனது கணவர், மகள், மகன், பேரன்கள் என அனைவருடன் இணைந்து பொங்கலை கொண்டாடியுள்ளார்.

தனது குடும்பத்தினர் அனைவருடன் இணைந்து ராதிகா சரத்குமார் பொங்கல் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..