திடீரென லீக்கான சூர்யாவின் கங்குவா பட போட்டோ

கங்குவா
நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா.

சிவா அவர்கள் இயக்க பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலர் நடிக்க யு.வி. கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துள்ளது, நடிகர் சூர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் படத்தின் கடைசி ஷாட்டின் போது எடுத்த போட்டோவை பகிர்ந்திருந்தார்.

லீக் ஆன போட்டோ
3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ரசிகர்கள் படத்தின் ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருக்க படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சூர்யாவின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள்.