அயோத்தி குறித்த பதிவால் சர்ச்சையில் சிக்கிய சித்ரா

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22 ஆம் திகதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் அது தொடர்பில் வெளியிட்ட பதிவால் பிரபல பின்னை பாடகி சித்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ராமர் கோவில் திறக்கப்படும் நாளில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்
இந்நிலையில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை ஜெபிக்குமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் பாடகி சித்ரா, ராமர் கோவில் திறப்பு தினத்தன்று மதியம் 12. 20 மணிக்கு அனைவரும் ராம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

மாலை நேரத்தில் திருக்கார்த்திகைக்கு தீபம் வைக்கிற மாதிரி வீட்டோட எல்லா இடத்திலயும் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என கூறியிருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் பாடகி சித்ராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.