அல்போன்ஸ் புத்திரன்
நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அல்போன்ஸ் புத்திரன்.
இதனை அடுத்து இவர் இயக்கிய பிரேமம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போதும் அந்த திரைப்படம் Masterpiece என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக அல்போன்ஸ் புத்திரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நடிகர்களை குறித்து சர்ச்சை கூறிய கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
பயமுறுத்திக்கிறார்கள்!
இந்நிலையில் தற்போது அல்போன்ஸ் புத்திரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், “நான் இனி இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் எந்த ஒரு பதிவும் பதிவிட போவதில்லை. காரணம் என்னவென்றால் நான் சோசியல் மீடியாவில் பதிவிடும் பதிவுகள் என் அப்பா, அம்மா, என்னுடைய சகோதரிக்கு பிடிக்கவில்லை . என் உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள்”.
“நான் அமைதியாக இருந்தால் எல்லாரும் நிம்மதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அப்படியே இருக்கட்டும்” என்று அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டு இருக்கிறார்.