திடீரென செருப்பு அணியாமல் பொது இடத்திற்கு சென்ற விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் தான் விஜய் ஆண்டனி.

பின் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், வேலாயுதம், என இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி நான் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.

அதன்பின் அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்தவருக்கு பிச்சைக்காரன் படம் பெரிய ரீச் கொடுத்தது.

கடைசியாக அவரது நடிப்பில் கொலை என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

பிரபலத்தின் கேள்வி
விஜய் ஆண்டனி வாழ்க்கையில் கடந்த வருடம் சோகத்தின் உச்சமாக ஒரு விஷயம் நடந்தது, அவரது மகள் மீரா இப்போது இல்லை.

அந்த சோகமான சம்பவத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதை கண்ட ஒருவர் ஹிட்லர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அவர், குறிப்பிட்டு எந்தக் காரணமும் இல்லை, செருப்பு அணிய தோன்றவில்லை. செருப்பு அணிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் அணிந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.