அன்னபூரணி சர்ச்சை
நடிகை நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் சர்ச்சை பெரிதளவில் ஆகிவிட்டது. ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறியது தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஒரு வசனத்தால் ஓடிடி தளத்தில் இருந்து அன்னபூரணி படத்தை அப்படியே நீக்கிவிட்டனர்.
இறுதியாக நேற்று நடிகை நயன்தாரா மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அறிக்கையும் நயன்தாரா வெளியிட்டு இருந்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முடிவு வந்தது. இதில் நயன்தாராவிற்கு ஆதரவாக இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் தான் துணை நின்றார்.
சென்சார் செய்யப்பட்ட திரைப்படத்திற்கு ஓடிடி நிறுவனம் இப்படி செய்யக்கூடாது. அது தவறு என கூறியிருந்தார். அதே போல் நயன்தாராவின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். மற்றபடி திரையுலகை சேர்ந்த யாரும் நயன்தாராவிற்கு துணை நிற்கவில்லை என்பது சோகமான விஷயம்.
பிரிவினை பார்க்கிறார்களா
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இப்படத்தில் GST குறித்தும், கோவில்களுக்கு பதிலாக மருத்துவமனைகள் கட்டலாம் என விஜய் வசனம் பேசி இருந்தார். இதற்கு வடக்கில் இருந்து பெரும் எதிர்ப்பு விஜய்க்கும், மெர்சல் படத்திற்கும் எழுந்தது. அந்த நேரத்தில் ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
ஆனால், தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவிக்க யாருமே வரவில்லை. நடிகருக்கு துணை நின்றவர்கள், நடிகைக்கு துணை நிற்கவில்லை, பிரிவினை பார்க்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி கேட்க துவங்கிவிட்டனர்.