நடிகை பாவனா
மலையாளம் மற்றும் தமிழ் சினிமா இரு மொழிகளிலும் பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை பாவனா. இவர் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் அறிமுகமாவதற்கு முன் மலையாளத்தில் 15 படங்களுக்கும் மேல் பாவனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பாவனா தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படத்தில் நடித்து வந்தார்.
இதன்பின், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் கூட நடிக்க துவங்கினார். தற்போது தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருக்கும் பாவனா கடந்த 2018ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமண புகைப்படங்கள்
திருமணத்திற்கு பின் கூட சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் பாவனா இன்று தனது திருமண நாள் என கூறி மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தனது திருமண புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
6ஆம் ஆண்டு திருமண நாளுக்கு, நடிகை பாவனாவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..