குணசேகரனுக்கு எதிராக மாறிய தம்பி

எதிர்நீச்சல் சீரியல்
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்தது.

ஆனால், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்துவின் மறைவிற்கு பின், டாப் 5ல் வந்துவிட்டது. எதிர்நீச்சல் சீரியலுக்கு சிறிய வீழ்ச்சி ஏற்பட்டு இருந்தாலும் கூட தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து கொண்டு இருக்கிறது.

எதிராக மாறிய கதிர்
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் தற்போது பிரபல நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் தனது அண்ணன் பேச்சு மட்டுமே வேதவாக்கு என வாழ்ந்து வந்த தம்பி கதிர் தற்போது தனது அண்ணன் ஆதி குணசேகரனுக்கு எதிராகவே மாறியுள்ளார்.

ஆம், தற்போது வெளிவந்துள்ள இந்த வார ப்ரோமோவில் தனது அண்ணன் ஆதி குணசேகரனை பார்த்து, ‘ஒன்னு நீ திருந்து இல்ல என்ன திருந்த விடு’ என கோபத்துடன் கூறுகிறார் கதிர். இதன்பின் வரும் காட்சியில், தன் வீட்டில் இருக்கும் மருமகள்கள் யாரும் தேவையில்லை என கூறிவிட்டு, கையில் அரிவாளுடன் வந்து நிற்கிறார் விசாலாட்சி.

மிகவும் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த வார எதிர்நீச்சல் சீரியல் இருக்க போகிறது என இந்த ப்ரோமோ பார்க்கும் போதே தெள்ளத்தெளிவாக தெரிகிறது.