மிஷன் படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

மிஷன் சாப்டர் 1
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இருந்து மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லயே.

இதில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய இரு திரைப்படங்களும் ஒரு பக்கம் நல்ல இருக்கு என்ற விமர்சனத்தை பெற்றாலும், மறுபக்கம் ஓரளவு ஓகே என்ற விமர்சனத்தையும் பெற்றது. ஆனால், மக்கள் மத்தியில் ’படம் சூப்பர்’ என்ற வார்த்தை மட்டுமே ஒலித்தது என்றால் அது அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படத்திற்கு தான்.

விமர்சனம்
சில குறைகள் படத்தில் இருந்தாலும், மக்கள் மத்தியில் இப்படத்திற்கு மற்ற இரண்டு படங்களை விட நல்ல விமர்சன வரவேற்பு கிடைத்தது. குறைந்த திரையரங்கங்கள் கிடைத்ததால் மட்டுமே, இப்படத்தின் வசூல் குறைந்தது.

மற்ற இரண்டு படங்கள் போல் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்திற்கு அதிக திரையரங்கங்கள் கிடைத்திருந்தால், கண்டிப்பாக வசூலில் பட்டையை கிளப்பி இருக்கும் என திரை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

வசூல்
இந்நிலையில், மிஷன் சாப்டர் 1 வெளிவந்து 10 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. நல்ல விமர்சனத்திற்குப்பின் திரையரங்கங்கள் கூடி கொண்டே வருவதால், இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.