சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.
படகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதை மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிலாபத்திலிருந்து ஆறு பணியாளர்களுடன் கடந்த 12ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கடத்திச் செல்லப்பட்டது.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில், கடத்தப்பட்ட மீனவர்களை விடுவிக்க , அரசாங்கத்தால் சோமாலிய அரசின் உதவி நாடப்பட்டது.
இந்த நிலையில் கொள்ளையர்களிடமிருந்து இலங்கை மீன்பிடி இழுவைப்படகு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.