நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இன்று (02.01.2024) சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில் உள்ள இடங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பிரதானமாக நுவரெலியாவில் உள்ள 26 பாடசாலைகளில் 500 மீற்றர் தூரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
எனினும், நாட்டில் மாணவர்களுக்கிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையினால் அதனை தடுப்பதற்காக நுவரெலியாவில் பாடசாலை ஆரம்பித்தவுடன் பாடசாலை மாணவர்களையும் சோதனையிடும் நடவடிக்கை முன்னனெடுக்கப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள், பெற்றோர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பயன்படுத்துபவர்கள் தொடர்பாக தகவல் அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிய தருமாறும் போதை பொருள் வியாபாரிகள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.